Friday, July 07, 2006

3. சீர்காழி பண் - தக்கராகம்
திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங் கொண்டருளித் திருமுன் னின்றேஅருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட் டளையாக்கி அவற்றுள் ஒன்றுவிருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார் தமைப்பாட மேவு காதல்பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றிஎடுத் தருளினார் "பூவார் கொன்றை".
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா காவா யெனநின் றேத்துங் காழியார் மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் பாவா ரின்சொற் பயிலும் பரமரே.

4. திருநனிபள்ளி பண் – பியந்தைக் காந்தாரம்

"காரைகள் கூகை முல்லை" எனநிகழ் கலைசேர் வாய்மைச்சீரியற் பதிகம் பாடித் திருக்கடைக் காப்புத் தன்னில்"நாரியோர் பாகர் வைகும் நனிபள்ளி உள்கு வார்தம்பேரிடர் கெடுதற் காணை நம"தெனும் பெருமை வைத்தார்.
காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மிவிம்மு சுடுகாட மர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.

5. திருவலம்புரம் பண் – பழம்பஞ்சுரம்

கறையணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடிமறையவர் போற்ற வந்துதிருவலம் புரத்து மன்னும்இறைவரைத் தொழுது பாடும் "கொடியுடை" ஏத்திப் போந்துநிறைபுனல் திருச்சாய்க் காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.
கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத் துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும் வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.

6. திருச்சாய்க்காடு பண் - சீகாமரம்
வானள வுயர்ந்த வாயிலுள்வலங் கொண்டு புக்குத்தேனலர் கொன்றை யார்தந் திருமுன்பு சென்று தாழ்ந்துமானிடந் தரித்தார் தம்மைப் போற்றுவார் "மண்புகார்" என்(று)ஊனெலாம் உருக ஏத்தி உச்சிமேற் குவித்தார் செங்கை.
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங் கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும் விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்தாள் சார்ந்தாரே

7. திருவெண்காடு பண் - சீகாமரம்

மெய்ப்பொரு ளாயி னாரை வெண்காடு மெவி னாரைச்செப்பரும் பதிக மாலை "கண்காட்டு நுதல்" முன் சேர்த்திமுப்புரஞ் செற்றார் பாதம் சேருமுக் குளமும் பாடிஒப்பரு ஞானம் உண்டார் உளமகிழ்ந் தேத்தி வாழ்ந்தார்.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே. பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. சக்கரம்மாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

0 Comments:

Post a Comment

<< Home