Saturday, August 11, 2007

ALL AUIDO RECORDINGS CICK HERE

Friday, August 03, 2007

MEELA ADMI (AUIDO)

திருவாரூர்

பண் - செந்துருத்தி


திருச்சிற்றம்பலம்

964 மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே.
7.95.1
965 விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்ற மொன்றுஞ் செய்த தில்லை
*கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே.
*விச்சை - வித்தையென்பதுபோல்
கொச்சை - கொத்தை எனநின்றது.
7.95.2
966 அன்றில் முட்டா தடையுஞ் சோலை
ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்
வாழ்ந்து போதீரே.
7.95.3
967 துருத்தி உறைவீர் பழனம் பதியாச்
சோற்றுத் துறையாள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்
மனமே எனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால்
வாழ்ந்து போதீரே.
7.95.4
968 செந்தண் பவளந் திகழுஞ் சோலை
இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா
றுமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார்
தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ வென்றால்
வாழ்ந்து போதீரே.
7.95.5
969 தினைத்தா ளன்ன செங்கால் நாரை
சேருந் திருவாரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்
புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து
தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால்
வாழ்ந்து போதீரே.
7.95.6
970 ஆயம் பேடை அடையுஞ் சோலை
ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா
றுமக்காட் பட்டோர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி
மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
வாழ்ந்து போதீரே.
7.95.7
971 கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
இகழா தேத்துவோம்
பழிதா னாவ தறியீர் அடிகேள்
பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால்
வாழ்ந்து போதீரே.
7.95.8
972 பேயோ டேனும் பிரிவொன் றின்னா
தென்பர் பிறரெல்லாங்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ
கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே.
7.95.9
973 செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லத்தா னம்மே
இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை
இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
வாழ்ந்து போதிரே.
7.95.10
974 காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்
கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லத்தா னத்தே
அடிப்பே ராரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
வாழ்ந்து போதீரே.
7.95.11

காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று,
இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது.


திருச்சிற்றம்பலம்

VINGU VILAY (AUIDO)

திருமாகறல் - திருவிராகம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

1.விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.

2.கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.

3.காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.

4. இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனேமங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையேநுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.

5.துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.


6.மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவேஉன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.

7.வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.

8.தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையேமாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.


9.தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.


10.காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.


11.கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையேஉடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே.


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர், தேவியார் - புவனநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

Monday, July 30, 2007

ALAMDHAN (AUIDO)

திருவேகம்பம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

624

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.1
625

உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.2
626

திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி யேத்தி வழிபடப் பெற்ற
*பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
*காமாட்சியம்மையால் பூசிக்கப்பட்ட ஏகாம்பர
நாதரே பெரியகம்பர்.

7.61.3
627

குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் புமலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வறே.

7.61.4
628

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யிற்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
*நல்ல கம்பனை எங்கள் பிரானை
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
*உருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு
நல்லகம்பனென்றுபெயர்.

7.61.5
629

திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளருஞ்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.6
630

விண்ண வர்தொழு தேத்தநின் றானை
வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
நாளும் நாம்உகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.7
631

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.8
632

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுரம் மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி யேத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.9
633

எள்க லின்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
*கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

*திருமாலாற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப்
பெருமானுக்கு கள்ளக்கம்பனென்றுபெயர்.

7.61.10
634

பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மானென்றெப் போதுங்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானைக்
குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்
நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே.

7.61.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர், தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

KAN KATTUM (AUIDO)

திருவெண்காடு


பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

513

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

01
514

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

02
515

மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி
எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

03
516

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

04
517

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

05
518

தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

06
519

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

07
520

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

08
521

கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

09
522

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

10
523

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர், தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Thursday, July 26, 2007

thiruvanamalai thiru thala puranam (auido )

thiruvanamalai thiru thala puranam audio recordings are avilable in the site

http://www.bnaiyer.com/Lokadharma/LD-Events-Soundbites.htm

Wednesday, July 25, 2007

THUNJALUM THUNJAL (AUIDO)

திருப்பஞ்சாக்கரப்பதிகம்

பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
01
2.
மந்திர நான்மறை யாகி வானவர்சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வனசெந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
02
3.
ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
03
4.
நல்லவர் தீயரெ னாது நச்சினர்செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவகொல்லந மன்தமர் கொண்டு போமிடத்தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
04
5.
கொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத்தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடைஅங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
05
6.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
06
7.
வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்பீடை கெடுப்பன பின்னை நாடொறும்மாடு கொடுப்பன மன்னு மாநடம்ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே.
07
8.
வண்டம ரோதி மடந்தை பேணினபண்டையி ராவணன் பாடி யுய்ந்தனதொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
08
9.
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கார்வண மாவன அஞ்செ ழுத்துமே.
09
10.
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்சித்தத் தவர்கள் தெளிந்து தேறினவித்தக நீறணி வார்வி னைப்பகைக்கத்திர மாவன அஞ்செ ழுத்துமே.
10
11.
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறைகற்றவன் காழியர் மன்னன் உன்னியஅற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்துற்றன வல்லவர் உம்ப ராவரே.

auido recording of the padhigam: http://www.bnaiyer.com/Lokadharma/LDE-sb-02%20-%20thunjalum.htm

Monday, October 16, 2006

PLEASE MAKE A VISIT: http://vijayalakshmirajaram.blogspot.com/

Sunday, October 15, 2006






THESE WERE THE PHOTOS OF THE MEETING FOLLOWED BY A MUSICAL DISCOURSE ON APPAR CHARITHIRAM

The loka dharma seva foundation invited me to attend the meeting to propagte hindu dharma. In that one of the subject was how to use thevaram as tool to unite all people to one group. you can also visit http://www.bnaiyer.com/LDSF for their activity. The meetting was held on 15-10-06

Thursday, October 12, 2006








THE PHOTOS OF THE PROGRAMME AT SAIBABA TEMPLE SALIGRAMAM CHENNAI.

THRER HAS BEEN MUSICAL DISCOURSE ON THE MERITS OF THEVARAM AT SAI BABA TEMPLE SALIGRAMAM NEAR VADAPALANI CHENNAI ON 11-10-06. IT IS PROPOSED TO CNODCT FREE THEVARAM CLASS IN THAT AREA PEOPLE WHO LIVE NEARBY CAN BE BENIFITTED. FOR THIS YOU CAN CONTACT Mr Dr PARTHASARATHY SALIGRAMAM.HIS TELEPHONE NO. IS 044-23765448 CHENNAI.


THE PROGRAMME PHOTOS




Wednesday, August 02, 2006

FIRST PADHIKAM OF THIRU NYAANA SAMBANDER
This is the first padhikam(song) of Thiru Nyaana Sambandhar. This is in the paN of Nattappaadai (Carnatic Raga Naattai). In this song Sambandhar has indicated the five actions of the God in a very nice way.The Holy Bull signifies the Dharma or Justice. The God comes on the Holy Bull. This indicates creation. The Moon once ,when he was cursed to lose his "kala"s by Dhaksha, surrendered himself finally to Lord Shiva and pleaded for rescue. The Graceful Lord wore him on His matted hair so that he grows. Sambandhar refers to this incidence of protection.He smears the ash that is spread in the cremation ground. This deed indicates He alone is immortal. This is the act of destruction. The next one is creating illusions. It is the thief who covers up the fact. God is also a thief. Because he steals our hearts ! The Veedhaas also praise Him as, stheenaanaam pathi (head of thieves), thaskaraanaam pathi (head of robbers).The fifth one is the act of love in which He blesses the persons who involve themselves in His Holy feet. Sambandhar indicates the puraaNa of Siirkaazi where Brahma offered prayers to Lord Shiva, and thus got His blessings. (Hence the town is also called Brahmapuram).One nice thing to note in this song is it starts with the first letter as the PraNava. (th+oo). Yes He explains the act of that PraNava ruupa in this song ! Salutations to the God of Brahmapuram
Translation:thOdudaiya cheviyan - He wears a ring in His ear, vidaiyERi - Comes on the Holy Bull, yOr thUveN madhichUdi - wears a Moon (in Head), kAdudaiya chudalaip podipUchi - smears the ash in the cremation ground, yen uLLam kavarkaLvan - He is the thief who steals my heart, Edudaiya malarAn - One with a flower or the one on the flower having the book(Veedhaas) - Brahma, munain^At paNin^dhEththa aruLcheydha - when prayed earlier blessed him, pIdudaiya piramA pura - Brahmapuram which having a lot of pride, mEviya pemmAn ivananRE - This person is the God who resides there.

Sunday, July 30, 2006

Greatness of devotees






Oh, the Lord with vEl (kumAra), if you ask what is big, world is big. But the world was created by brahmA. BrahmA was born in the navel of vishNu. VishNu sleeps in the ocean. The ocean was drunk by agasthya. Agasthya was born from a pot. Pot is a small grain (in size) in this earth. But this earth is hold by the serpent in just one head. But that serpent is a small ring in umA's finger. UmA is there in one part of God, God is in the heart of the devotee. So the greatness of the devotee is great to explain.
A careful look into the thirumuRais will reveal a noteworthy point. In two places God Himself gives a statement and asks to continue the song. One occasion is in thiruvArUr when sun^dha mUrthi nAyanAr wanted to sing thiruth thoNdathth thokai, the greatness of devotees in the "dhEvAsiriya mantapam". Lord gives the first line as "thillai vAz an^dhaNar tham adiyArkkum adiyEn"(slave to the slave of the devotees who live in chithambaram). The other is when ' thoNdar chIr paravuvAr' sEkkizAr wanted to sing elaborately the life of 63 saints in the thiruth thoNdath thokai. Then also Lord says the first word, "ulakelAm". sEkkizAr starts and ends his thiruth thoNdar purANam with the word ulakelAm. Both were sung to praise the devotees. How great are these devotees, to get the songs of their praise to be blessed with the Lord Shiva's own words.In purANas also it can be seen that Lord Shiva comes for the destruction of evil forces not when they denounce the Lord, but when those evil forces start disturbing the true devotees. For example gajamukAsura, an^dhakAsura and kAla were subjected to the fury of Lord when they tortured the devotees. The Lord takes care of His devotees and offers a reliable shelter in His feet. It is the duty of the devotee to keep praying the Lord unaffected by the external disturbances.


Saturday, July 29, 2006

Rescue in the final moment




This is a song in the ThiruvaiyaaRRu thiruppathikam of Thiru Gnana Sambandhar, in the pan Meeka raakak kurinji (Niilaampari in Carnatic Music). This is one of the Padhikams that are sung for getting rain (Like the Amruthavarshini in Carnatic). There are three nice elements which makes us enjoy the song very much other than the excellent pan Mega raakak kurinji itself.The first two lines describe the helplessness of the mortals in their final moments of life and the helping hand the Immortal offers to one who calls for. Think of a man in his final moments. It is very beautifully portrayed in these lines.
All his senses have gone out of control, he is not able to practice his routines, the thinking power is vanishing, body is not able to stand - so he has to lie on his body to even move. In that pathetic situation only the God id there to say "Don't be frightened, I'm there" The third and fourth lines describe the natural beauty of the place ThiruvaiyaaRu. It is a place surrounded by five small rivers. It is a very beautiful place. Sambandhar 's song depicts the beauty in words for persons who haven't seen its beauty.
The girls who came to worship the Lord dance there, music instruments make a lot of noise. Thinking that this sound is a thunder some monkeys, frightened, climb the trees and look into the sky for clouds. What a nice depiction !! See some more deep into it. Are we missing something. Oh Yes! The last two lines are not only the description of the beauty of the land, but also has a link with the theme that is said in the first two lines.Like the monkeys which look into the sky while the source of noise where somewhere else, the man due to his ignorance and vanishing thinking capacity, worries himself thinking that the links he has in the world are real and durable, he forgets to taste the bliss with the real Truth, the God. For one who ,even after his dwelling in the world, calls the God for help in the final moments the God shows His Grace.
Translation
pulanain^dhum - the five senses, poRikalaN^ki - out of control of devices(ear, eye etc.), n^eRimayaN^ki - unable to find the right path, aRivazin^dhittu - the knowledge vanishes, aimmElun^dhi - lying on the body, alaman^dha pOdhAka - in that helpless situation, anychElenRu - saying "Don't be frightened" aruLcheyvAn - One who blesses. amarumkOyil - His temple, valamvan^dha madavArkaL - the girls who came circumambuting(Pradhakshana) the temple, n^adamAda - dance (or walk), muzavadhira - the music instrument "muzavu" (a taala vaadhya instrument made of leather, like tablaa, mridhangam) making loud noise, mazaiyenRanychi - fearing it to be rain(thunder), chilaman^dhi - some female monkeys, alaman^dhu - freightened, maramERi - climbing the trees, mukilpArkkum - looking into the sky for clouds, thiruvaiyARE - that kind of town "TiruvaiyaaRu".

Thursday, July 27, 2006

திருக்காட்டுப்பள்ளி

பண் - நட்டபாடை

செய்யரு கேபுனல் பாயஓங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்கையரு கேகனி வாழையீன்று கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப்பையரு கேயழல் வாயவைவாய்ப் பாம்பணை யான்பணைத் தோளிபாகம்மெய்யரு கேயுடை யானையுள்கி விண்டவ ரேறுவர் மேலுலகே.
45
* இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

46
திரைகளெல் லாமல ருஞ்சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளிஉரைகளெல் லாமுணர் வெய்திநல்ல உத்தம ராயுயர்ந் தாருலகில்அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க் காட்செய அல்லல் அறுக்கலாமே.
47
தோலுடை யான்வண்ணப் போர்வையினான் சுண்ணவெண் ணீறுது தைந்திலங்குநூலுடை யானிமை யோர்பெருமான் நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்காலுடை யான்கரி தாயகண்டன் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிமேலுடை யானிமை யாதமுக்கண் மின்னிடை யாளொடும் வேண்டினானே.
48
சலசல சந்தகி லோடும்உந்திச் சந்தன மேகரை சார்த்தியெங்கும்பலபல வாய்த்தலை யார்த்துமண்டி பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்கலகல நின்றதி ருங்கழலான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்சொலவல தொண்டர்க ளேத்தநின்ற சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.
49
தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங்களையவி ழுங்குழ லார்கடியக் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்துளைபயி லுங்குழல் யாழ்முரல துன்னிய இன்னிசை யால்துதைந்தஅளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் காட்செய அல்லல் அறுக்கலாமே.
50
முடிகையி னாற்றொடும் மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி காதல்செய் தான்கரி தாயகண்டன்பொடியணி மேனியி னானையுள்கிப் போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்றடிகையி னாற்றொழ வல்லதொண்டர் அருவினை யைத்துரந் தாட்செய்வாரே.

51
பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழல் நாடொறும் பேணியேத்தமறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்டகறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே.
52
செற்றவர் தம்அர ணம்மவற்றைச் செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிஉற்றவர் தாமுணர் வெய்திநல்ல உம்பருள் ளார்தொழு தேத்தநின்றபெற்றம ரும்பெரு மானையல்லால் பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே.

53
ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்குண்டர்க ளோடரைக் கூறையில்லார் கூறுவ தாங்குண மல்லகண்டீர்அண்டம றையவன் மாலுங்காணா ஆதியி னானுறை காட்டுப்பள்ளிவண்டம ரும்மலர்க் கொன்றைமாலை வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.
54
பொன்னியல் தாமரை நீலம்நெய்தல் போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக் காதல னைக்கடற் காழியர்கோன்துன்னிய இன்னிசை யாற்றுதைந்து சொல்லிய ஞானசம் பந்தன்நல்லதன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந் தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர்,

தேவியார் - அகிலாண்டநாயகியம்மை

திருச்சிற்றம்பலம்

திருப்புகலியும் - திருவீழிமிழலையும்
வினாவுரை
பண் - நட்டபாடை

34
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும்பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் புகலி நிலாவிய புண்ணியனேஎம்மிறை யேயிமை யாதமுக்கண் ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
35
கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனேஎழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர் இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த விண்ணிழி கோயில் விரும்பியதே.
36
கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக வாடை கலந்துதுங்கப்பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப் புகலி நிலாவிய புண்ணியனேஇன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்மின்னியல் நுண்ணிடை யார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
37
நாகப ணந்திகழ் அல்குல்மல்கும் நன்னுதல் மான்விழி மங்கையோடும்பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண் புகலிநி லாவிய புண்ணியனேஏகபெ ருந்தகை யாயபெம்மான் எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
38
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் தையலோடுந் தளராத வாய்மைப்புந்தியி னான்மறை யோர்களேத்தும் புகலி நிலாவிய புண்ணியனேஎந்தமை யாளுடை ஈசஎம்மான் எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்வெந்தவெண் ணீறணி வார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
39
சங்கொலி இப்பிசு றாமகரந் தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப் புகலி நிலாவிய புண்ணியனேஎங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான் எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
40
காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் காம்பன தோளியொ டுங்கலந்துபூமரு நான்முகன் போல்வரேத்தப் புகலி நிலாவிய புண்ணியனேஈமவ னத்தெரி யாட்டுகந்த எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்வீமரு தண்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
41
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள் இற்றல றவ்விர லொற்றியைந்துபுலங்களைக் கட்டவர் போற்றஅந்தண் புகலி நிலாவிய புண்ணியனேஇலங்கெரி யேந்திநின் றெல்லியாடும் எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
42
செறிமுள ரித்தவி சேறியாறுஞ் செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப்பொறியர வத்தணை யானுங்காணாப் புகலி நிலாவிய புண்ணியனேஎறிமழு வோடிள மான்கையின்றி இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
43
பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த பான்மைய தன்றியும் பல்சமணும்புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண் புகலி நிலாவிய புண்ணியனேஎத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
44
விண்ணிழி கோயில் விரும்பிமேவும் வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்புண்ணிய னைப்புக லிந்நிலாவு பூங்கொடி யோடிருந் தானைப்போற்றிநண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி நான்மறை ஞானசம் பந்தன்சொன்னபண்ணியல் பாடல்வல் லார்களிந்தப் பாரொடு விண்பரி பாலகரே.

இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகைதிருச்சிற்றம்பலம்

Friday, July 07, 2006

8. கோயில் பண் – குறிஞ்சி

ஊழி முதல்வர்க் குரிமைத் தொழிற்சிறப்பால்வாழிதிருத் தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தேஏழிசையும் ஓங்க எடுத்தார் எமையாளும்காழியர்தங் காவலனார் "கற்றாங் கெரியோம்பி".

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

9. கோயில் பண் - காந்தார பஞ்சமம்

"ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்" என்றெடுத் தார்வத்தால்பாடி னார்பின்னும் அப்பதி கத்தினிற் பரவியபாட் டொன்றில்நீடு வாழ்தில்லை நான்மறை யோர்தமைக் கண்டஅந் நிலைஎல்லாம்கூறு மறுகோத்(து) "அவர்தொழு தேத்துசிற் றம்பலம்" எனக்கூறி.

ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர்பிரி யாதசிற் றம்பலம் நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே பாடினாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள் சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.

3. சீர்காழி பண் - தக்கராகம்
திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங் கொண்டருளித் திருமுன் னின்றேஅருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட் டளையாக்கி அவற்றுள் ஒன்றுவிருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார் தமைப்பாட மேவு காதல்பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றிஎடுத் தருளினார் "பூவார் கொன்றை".
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா காவா யெனநின் றேத்துங் காழியார் மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் பாவா ரின்சொற் பயிலும் பரமரே.

4. திருநனிபள்ளி பண் – பியந்தைக் காந்தாரம்

"காரைகள் கூகை முல்லை" எனநிகழ் கலைசேர் வாய்மைச்சீரியற் பதிகம் பாடித் திருக்கடைக் காப்புத் தன்னில்"நாரியோர் பாகர் வைகும் நனிபள்ளி உள்கு வார்தம்பேரிடர் கெடுதற் காணை நம"தெனும் பெருமை வைத்தார்.
காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மிவிம்மு சுடுகாட மர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.

5. திருவலம்புரம் பண் – பழம்பஞ்சுரம்

கறையணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடிமறையவர் போற்ற வந்துதிருவலம் புரத்து மன்னும்இறைவரைத் தொழுது பாடும் "கொடியுடை" ஏத்திப் போந்துநிறைபுனல் திருச்சாய்க் காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.
கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத் துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும் வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.

6. திருச்சாய்க்காடு பண் - சீகாமரம்
வானள வுயர்ந்த வாயிலுள்வலங் கொண்டு புக்குத்தேனலர் கொன்றை யார்தந் திருமுன்பு சென்று தாழ்ந்துமானிடந் தரித்தார் தம்மைப் போற்றுவார் "மண்புகார்" என்(று)ஊனெலாம் உருக ஏத்தி உச்சிமேற் குவித்தார் செங்கை.
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங் கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும் விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்தாள் சார்ந்தாரே

7. திருவெண்காடு பண் - சீகாமரம்

மெய்ப்பொரு ளாயி னாரை வெண்காடு மெவி னாரைச்செப்பரும் பதிக மாலை "கண்காட்டு நுதல்" முன் சேர்த்திமுப்புரஞ் செற்றார் பாதம் சேருமுக் குளமும் பாடிஒப்பரு ஞானம் உண்டார் உளமகிழ்ந் தேத்தி வாழ்ந்தார்.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே. பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. சக்கரம்மாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த பாடல்களும் - சம்பந்தர் தேவாரமும்

பெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள் தொகுப்பு பற்றிய குறிப்புகள்
தெய்வச் சேக்கிழார் மூவர் தேவாரங்களை அடியொற்றி மூவர் தம் வரலாறுகளைப் போற்றுவது வெளிப்படையாகக் காணத்தக்கது.
தேவாரங்களைக் குறிப்பதோடு அல்லாமல் அவற்றின் மையக் கருத்துக்களைச், சொற்றொடர்களை பலவாகச் சிரமேற்கொண்டு பெரிய புராணத்தில் போற்றியுள்ளார்.
இத்தொகுப்பு கீழ்க்காணும் முறையைப் பின்பற்றித் தொகுக்கப்பட்டது.
பெரிய புராணத்தில் தேவாரத்தில் காணும் சொற்றொடர்களே காணப்படுவது. (உ-ம். தோடுடைய செவியன்)
புராணத்தில் தேவாரத்தில் கூறப்பட்ட மையக் கருத்து வெளிப்படுத்தப்படுவது. (உ-ம். நமிநந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை .. பாடி)
இத்தொகுப்பின் நோக்கம் தேவாரப் பாடல்களோடு அவற்றைக் குறிக்கும் பெரிய புராணப் பாடல்களையும் அடியவர்கள் அதே இசையில் பாடித் திருவருள் பெற வேண்டும் என்பதே.
இத்தொகுப்பு பலமுறை பெரிய புராணத்தில் மீண்டும் மீண்டும் சரி பார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. எனினும் பிழைகள் இன்னும் இருக்கக்கூடும். செம்மலர் நோன்தாளைத் தொழும் அடியவர்கள் அன்பு கூர்ந்து பொறுத்தல் கோருகின்றோம்.
இத்தொகுப்பு பாட்டே விரும்பும் அருச்சனையாகக் கொள்ளும் இசை விரும்பும் கூத்தனார் திருவடிகளுக்கு அஞ்சலி.

திருச்சிற்றம்பலம்

1. திருப்பிரமபுரம் பண் - நட்டபாடை

செம்மைபெற எடுத்ததிருத் "தோடுடைய செவியன்" எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுர மேவினார்
தம்மைஅடையா ளங்களுடன் சாற்றித் தாதையார்க்(கு)
"எம்மையிது செய்தபிரான் இவனன்றே" எனஇசைத்தார்.
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட
அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார்
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும்
இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்
வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை
நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும்
போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும்
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்

2. திருக்கோலக்கா பண் - தக்கராகம்

மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் விழுப்பொருளை வேணிமீதுபைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள்பரித் தருளுவானைமைந்நிறைந்த மிடற்றானை "மடையில்வா ளைகள்பாய" என்னும் வாக்கால்,கைந்நிறைந்த ஒத்தறுத்துக் கலைப்பதிகம் கவுணியர்கோன் பாடுங் காலை.
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.

Seerkazli
Seerkazli is known by various names in the Hindu 'puranam' or mythology. The deity is known as Brahmapureeswarar and the goddess as Thirunilai Nayaki. There are other deities known as Thoniappar and Sattainathar worshipped here. This is also the birthplace of the famous saint Gnanasambanthar.
Location
Seerkazhi is situated in the district of Tanjore between Chidambaram and Mayavaram on the Southern Railway. Busses ply from Chidambaram, Mayavaram and Kumbakonam. The nearest airport is in Trichi.
The Temple
The temple is in the middle of the village with four tall 'gopuram' on each side with a high wall surrounding the temple premises. There is a large 'theertham' within the temple compound next to which there are two shrines, one for the Goddess Thirupurasundary and the other for Gnanasambanthar. The shrines to Thoniappar and Sattainathar are reached by climbing the steps on the rear of the main temple.
Legend
When Sambanthar was three years old he accompanied his father to the temple. The father Sivapatha Iruthayar, got into the water in the temple 'theertham' for his ablution before commencing 'pooja' in the temple. He immersed himself in water and was absorbed in his prayer. Young Sambandar became alarmed when he did not see his father for a long time and called out, "Ammah, Appah". His father did not hear the call from Sambanthar and continued with his prayer. When his father did not appear Sambanthar started wailing. At this moment Lord Shiva appeared with his consort. The Mother Goddess produced some milk in a golden vessel and gave it to Sambanthar to console him. When the father came out of the water he saw milk in the corners of the child's mouth. He was first intrigued but later became angry as he suspected that someone of a lesser caste had fed his son with milk in violation of the practice among their creed. He demanded the child to reveal the identity of the person who fed him with milk. Sambanthar then opened his mouth and sang a hymn in praise of Lord Shiva pointing at the direction of the temple. Sivapatha Iruthayar realised that his son had not only received milk from the almighty but also 'gnanam' (wisdom) by the grace of God. From that day he was known as Gnanasambandar. After this incident Gnanasambanthar was revered as a great soul and was taken to all the holy places where he sang in praise of the deities installed in those temples.
Opening Hours and Festivals
There are six daily 'pooja', three in the forenoon and three in the evening. The Brahmotsavam takes place in the Tamil month of Chiththirai. There are other festivals for the Goddess, Gnana-sambanthar and Sattanathar.
The temple is open from 6am till noon and then from 4pm till 9pm.

Thursday, July 06, 2006


My students are giveing music programme