Friday, July 07, 2006

8. கோயில் பண் – குறிஞ்சி

ஊழி முதல்வர்க் குரிமைத் தொழிற்சிறப்பால்வாழிதிருத் தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தேஏழிசையும் ஓங்க எடுத்தார் எமையாளும்காழியர்தங் காவலனார் "கற்றாங் கெரியோம்பி".

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

9. கோயில் பண் - காந்தார பஞ்சமம்

"ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்" என்றெடுத் தார்வத்தால்பாடி னார்பின்னும் அப்பதி கத்தினிற் பரவியபாட் டொன்றில்நீடு வாழ்தில்லை நான்மறை யோர்தமைக் கண்டஅந் நிலைஎல்லாம்கூறு மறுகோத்(து) "அவர்தொழு தேத்துசிற் றம்பலம்" எனக்கூறி.

ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர்பிரி யாதசிற் றம்பலம் நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே பாடினாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள் சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.

0 Comments:

Post a Comment

<< Home