Friday, August 03, 2007

MEELA ADMI (AUIDO)

திருவாரூர்

பண் - செந்துருத்தி


திருச்சிற்றம்பலம்

964 மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே.
7.95.1
965 விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்ற மொன்றுஞ் செய்த தில்லை
*கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே.
*விச்சை - வித்தையென்பதுபோல்
கொச்சை - கொத்தை எனநின்றது.
7.95.2
966 அன்றில் முட்டா தடையுஞ் சோலை
ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்
வாழ்ந்து போதீரே.
7.95.3
967 துருத்தி உறைவீர் பழனம் பதியாச்
சோற்றுத் துறையாள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்
மனமே எனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால்
வாழ்ந்து போதீரே.
7.95.4
968 செந்தண் பவளந் திகழுஞ் சோலை
இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா
றுமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார்
தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ வென்றால்
வாழ்ந்து போதீரே.
7.95.5
969 தினைத்தா ளன்ன செங்கால் நாரை
சேருந் திருவாரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்
புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து
தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால்
வாழ்ந்து போதீரே.
7.95.6
970 ஆயம் பேடை அடையுஞ் சோலை
ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா
றுமக்காட் பட்டோர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி
மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
வாழ்ந்து போதீரே.
7.95.7
971 கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
இகழா தேத்துவோம்
பழிதா னாவ தறியீர் அடிகேள்
பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால்
வாழ்ந்து போதீரே.
7.95.8
972 பேயோ டேனும் பிரிவொன் றின்னா
தென்பர் பிறரெல்லாங்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ
கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே.
7.95.9
973 செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லத்தா னம்மே
இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை
இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
வாழ்ந்து போதிரே.
7.95.10
974 காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்
கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லத்தா னத்தே
அடிப்பே ராரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
வாழ்ந்து போதீரே.
7.95.11

காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று,
இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது.


திருச்சிற்றம்பலம்

VINGU VILAY (AUIDO)

திருமாகறல் - திருவிராகம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

1.விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.

2.கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.

3.காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.

4. இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனேமங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையேநுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.

5.துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.


6.மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவேஉன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.

7.வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.

8.தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையேமாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.


9.தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.


10.காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.


11.கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையேஉடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே.


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர், தேவியார் - புவனநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

Monday, July 30, 2007

ALAMDHAN (AUIDO)

திருவேகம்பம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

624

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.1
625

உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.2
626

திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி யேத்தி வழிபடப் பெற்ற
*பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
*காமாட்சியம்மையால் பூசிக்கப்பட்ட ஏகாம்பர
நாதரே பெரியகம்பர்.

7.61.3
627

குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் புமலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வறே.

7.61.4
628

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யிற்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
*நல்ல கம்பனை எங்கள் பிரானை
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
*உருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு
நல்லகம்பனென்றுபெயர்.

7.61.5
629

திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளருஞ்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.6
630

விண்ண வர்தொழு தேத்தநின் றானை
வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
நாளும் நாம்உகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.7
631

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.8
632

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுரம் மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி யேத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7.61.9
633

எள்க லின்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
*கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

*திருமாலாற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப்
பெருமானுக்கு கள்ளக்கம்பனென்றுபெயர்.

7.61.10
634

பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மானென்றெப் போதுங்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானைக்
குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்
நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே.

7.61.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர், தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

KAN KATTUM (AUIDO)

திருவெண்காடு


பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

513

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

01
514

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

02
515

மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி
எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

03
516

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

04
517

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

05
518

தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

06
519

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

07
520

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

08
521

கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

09
522

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

10
523

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர், தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்